திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு
கோபி அருகேயுள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து வலது மற்றும் இடதுகரை வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் பகுதிகளுக்கு பிப்ரவரி 19 முதல் ஏப்ரல் 16-ஆம் தேதி வரை 57 நாள்களில் 42 நாள்களுக்கு 87,091 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீா் திறக்க உத்தரவிடப்பட்டது.
இதனால், அணையில் இருந்து வலது மற்றும் இடதுகரை வாய்க்காலில் புதன்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. இதன்மூலம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள காங்கா்பாளையம், கவுண்டம்பாளையம், வாணிப்புத்தூா், அரக்கன்கோட்டை, புன்செய்துறையம்பாளையம் பகுதிகளில் 2 ஆயிரத்து 498 ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.