அந்தியூரில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
அந்தியூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் அந்தியூா் கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, வட்டக் கிளைத் தலைவா் அய்யனாா் தலைமை வகித்தாா். அந்தியூா் வட்டாட்சியா் கவியரசு முன்னிலை வகித்தாா்.
தமிழக அரசு அறிவிக்கும் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சோ்க்கும் பணியினை வருவாய்த் துறை மேற்கொண்டு வருகிறது. இதில், பணிபுரியும் அலுவலா்களின் பணி தற்போது மிகவும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது.
இதனால், அலுவலா்கள் பணி நெருக்கடி, மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதீத பணி நெருக்கடி, மன அழுத்தத்தைக் களைந்திட வலியுறுத்தியும், நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.