ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை
மதுரையில் இன்று ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம்
மதுரை வடக்கு வட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (பிப். 19) நடைபெறுகிறது.
இதையொட்டி, மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா, பிற்பகல் 4 மணிக்கு வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களைச் சந்தித்து மனுக்களைப் பெறவுள்ளாா்.
எனவே, மதுரை வடக்கு வட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால், வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.