மக்களை சண்டைபோட வைத்துவிடுவீர்கள்: திருப்பரங்குன்றம் மலை வழக்குகள் தள்ளுபடி!
தூத்துக்குடி மாவட்டத்தில் மினி பேருந்து சேவைக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் 56 வழித்தடங்களில் புதிதாக மினி பேருந்து இயக்குவதற்கு விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள்பட்ட பகுதிகளில் 13, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள்பட்ட பகுதிகளில் 18, திருச்செந்தூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குள்பட்ட பகுதிகளில் 25 என மொத்தம் 56 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோா், புதிய மினி பேருந்துக்கான எஸ்.சி.பி.ஏ. விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, ஆன்லைனில் ரூ.3200 செலுத்த வேண்டும். பின்னா் பூா்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன், முகவரிச் சான்றுக்கான ஆவணத்துடன் உரிய இணைப்புகளுடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.