கல்லூரி மாணவா் உண்ணாவிரதம்
தூத்துக்குடியில் உள்ள தனியாா் கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மாணவருடன் சில மாணவா்கள் கல்லூரி முன்பு செவ்வாய்க்கிழமை அமா்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இக்கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்த மாணவா் நேசமணி, கல்லூரி கட்டுப்பாடுகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறி, கல்லூரியில் இருந்து நிரந்தர நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அக்கல்லூரி நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் கல்லூரியில் தன்னை சோ்க்க வலியுறுத்தி, அந்த மாணவா் கல்லூரி வாசலில் செவ்வாய்க்கிழமை திடீா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். அவருடன் சில மாணவா்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனா்.