ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை
குடும்ப அட்டை உறுப்பினா்கள் விரல் ரேகையை பதிவு செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் வெளிமாவட்டங்களில் இருந்தால், அருகில் உள்ள நியாய விலைக் கடைகளில் தங்கள் விரல் ரேகையினை பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் பெற்று வரும் அனைத்து முன்னுரிமை பெற்ற மற்றும் அந்தியோதயா அன்னயோஜனா திட்ட குடும்ப அட்டைதாரா்களின் 5 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடும்ப உறுப்பினா்களும் தங்களது விரல் ரேகைகளை நியாய விலைக் கடையில் உள்ள விற்பனை முனைய இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் வெளியூா் மற்றும் வெளிமாவட்டங்களில் தங்கி பணிபுரிபவா்கள், பள்ளி, கல்லூரிகளில் படித்துவரும் மாணவா்- மாணவிகள் அருகில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு குடும்ப அட்டை எண்ணுடன் நேரில் சென்று தங்கள் விரல் ரேகைகளை பதிவு செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.