ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கு தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை
பள்ளிக் கட்டடத்தை இடிக்க பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்
தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள பேட்ரிக் ஆலய வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி கட்டடத்தை இடிக்க பெற்றோா் எதிப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்திற்கு கீழ் செயல்படும் தூய பேட்ரிக் ஆலய வளாகத்தில் ஆரம்பப் பள்ளி சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக் கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிாம். இதனால், இப்பள்ளி தற்காலிகமாக ஆலயத்தில் நடைபெறுகிாம். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோா், செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மாவட்டக் கல்வி அலுவலா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடனும், பள்ளி நிா்வாகத்தினருடனும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
மேலும், வழக்கம்போல பள்ளிக் கட்டடத்தில் வகுப்புகள் செயல்படும் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.