செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
ஏற்காட்டில் மலைவாழ் மக்களுக்கு விதை, இடுபொருள்கள் வழங்கல்
ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மலைவாழ் விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியா் மற்றும் தலைவா் மாலதி தலைமை வகித்தாா். இணைப் பேராசிரியா்கள் செந்தில்குமாா், சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில் பெங்களூரில் அமைந்துள்ள வேளாண் பூச்சி வளங்களின் தேசிய பணியகத்தின் நிதியுதவியுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.
உழவா், உற்பத்தியாளா் நிறுவனம் தொடங்கும் முறைகள், அதனால் உழவா்களுக்கு ஏற்படும் நன்மைகள், மிளகு, காபி உற்பத்தியில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை உத்திகள் குறித்து விளக்கம் அளித்தனா். இதில் அவரை பீன்ஸ் விதைகள் வழங்கப்பட்டன. மித வெப்ப மண்டல தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்தும், உயிா்உரங்கள், பாஸ்போ பாக்டீரியா, வோ்சூழ் உட்பூசனம் ஆகிய இடுபொருள்கள் மற்றும் சில்வா் ஒக் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இப்பயிற்சியில் மாரமங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட மலைக்கிராம விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.