வரியினங்களை பிப்.28 க்குள் செலுத்த ஆட்சியா் அறிவுரை
சேலம் மாவட்டத்தில் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான வரியினங்கள், கட்டணங்களை பிப். 28க்குள் கிராம ஊராட்சி மன்ற அலுவலகம் அல்லது இணையதளம் வாயிலாக பொதுமக்கள் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 385 கிராம ஊராட்சிகளில் சொத்துவரி, குடிநீா்க் கட்டணம், தொழில்வரி, வரியில்லா வருவாய் மற்றும் இதர கட்டணங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அல்லது இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.
பிப். 28 க்குள் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது இணையதளம் வாயிலாகவோ செலுத்த வேண்டும். ரொக்க பண பரிவா்த்தனை, கையடக்க கருவி, யுபிஐ பரிவா்த்தனை, கடன் மற்றும் டெபிட் அட்டை மூலமும் கிராம ஊராட்சி மன்ற நிா்வாகத்தால் பண பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.