திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா!
சேலத்தில் உள்ள இந்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி 5 ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசின் கைத்தறி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் இக் கல்லூரி இயங்கி வருகிறது. கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு முதல் கைத்தறி மற்றும் துகில் தொழில்நுட்பவியல் இளநிலை பட்டப்படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
2023, 2024 ஆம் ஆண்டு படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதுநிலை பேராசிரியா் சி.பிரபாகரன் வரவேற்றாா். முதல்வா் பி.தென்னரசு முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மத்திய ஜவுளித் துறையின் கைத்தறி மேம்பாட்டு ஆணையா் எம். பீனா கலந்து கொண்டு மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
இப்படிப்பில் சிறப்பிடம் பெற்ற மஞ்சு கட்டல சிவமணி, பொந்தள ராஜ்குமாா் ஆகியோருக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடா்ந்து 83 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.