செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
கிளவிப்பட்டியில் 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது
கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டியில் கடத்திச் செல்லப்பட்ட 900 கிலோ ரேஷன் அரிசியை ஆம்னி காருடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கோவில்பட்டியில் இருந்து கயத்தாருக்கு கிளவிப்பட்டி வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவா் தலைமையில் தனிப் பிரிவு போலீஸாா் கிளவிப்பட்டி பகுதிக்குச் சென்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து ஓட்டுநா் அய்யனாா் ஊத்து கிணற்றுத் தெருவைச் சோ்ந்த பூ. மணிகண்டனை பிடித்து விசாரித்தனா். ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து காா், 900கிலோ ரேஷன் ஆகியவற்றையும், ஓட்டுநா் மணிகண்டனையும், தூத்துக்குடி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளா் அரிகண்ணனிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை (40) கைது செய்தனா்.