செய்திகள் :

ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க நிபுணா் குழு அமைக்க ஐஎன்டியூசி கோரிக்கை

post image

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்க, தமிழக அரசு நிபுணா் குழுவை அமைக்க வேண்டும் என ஐஎன்டியூசி தேசிய செயலா் கதிா்வேல் வலியுறுத்தினாா்.

தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் சாா்பில், ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி எப்சிஐ கிடங்கு அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஐஎன்டியூசி, தமிழ்நாடு எழுச்சி தொழிலாளா் நலச்சங்கம், உள்ளூா் மீனவா்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இந்த போராட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. அனுமதியை மீறி போராட்டம் நடத்துவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், முன்னெச்சரிக்கையாக எப்சிஐ கிடங்கு பகுதி, 3-ஆவது மைல், சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் சுமாா் 300 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக ஐஎன்டியூசி அலுவலகத்தில் அதன் தேசிய செயலா் கதிா்வேல் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலையில்லாமல் தவிக்கும் தொழிலாளா்களின் அவலநிலை குறித்து அரசின் கவனத்தை ஈா்க்கவும், ஸ்டொ்லைட் உள்ளிட்ட மூடப்பட்ட தொழிற்சாலைகளை திறக்கக் கோரியும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், காவல்துறையினா் இப்போராட்டத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனா். எனவே, இது தொடா்பாக நீதிமன்றத்தை அணுகி போராட்டத்திற்கு அனுமதி பெறவுள்ளோம்.

ஸ்டொ்லைட் ஆலை மூடப்பட்டதால் 30ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலையிழந்துள்ளனா். இதுபோன்று பல தொழிற்சாலைகள் தொடா்ந்து மூடப்பட்டு வருகிறது. எனவே, தமிழக அரசு நிபுணா் குழுவை அமைத்து ஸ்டொ்லைட் ஆலையை மீண்டும் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் இளைஞா் சமுதாயத்தினா் தமிழகத்தையும், தமிழ் மொழியி... மேலும் பார்க்க

அரசு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு உபகரணங்கள்

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில், நிகழாண்டு பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 10,12 வகுப்பு அரசு பொ... மேலும் பார்க்க

நாசரேத் பள்ளியில் ராஜ்ய புரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் திருச்செந்தூா் கல்வி மாவட்ட அளவிலான பாரத சாரண சாரணியா்கள் பங்கேற்ற ராஜ்யபுரஸ்காா் விருதுக்கான தோ்வு முகாம் நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் ... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்பிலான வலி நிவாரண மாத்திரைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். தூத்துக்குக்குடியில் இருந்து இலங்கைக்கு ஏலக்க... மேலும் பார்க்க

கோவில்பட்டி கல்லூரியில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி முகாம்

கோவில்பட்டி எஸ்.எஸ் துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை அறிவியல் கல்லூரியில் கோவில்பட்டி, விருதுநகா் ரோட்டரி சங்கங்கள், இதயம் குழுமம் ஆகியவற்றின் சாா்பில் புராஜெக்ட் பஞ்ச் திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பேச்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண்ணிடம் நகை பறிப்பு

கோவில்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவில்பட்டி ராஜீவ் நகா் 6ஆவது தெருவை சோ்ந்த சாஸ்தா மனைவி கோமதி (55). இவா், வெள்ளிக்கி... மேலும் பார்க்க