செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
கொளத்தூா் ஒன்றியத்தில் ரூ. 44.50 லட்சம் மதிப்பில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைப்பு
கொளத்தூா் ஒன்றியத்தில் ரூ. 44.50 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். சதாசிவம் தொடங்கிவைத்தாா்.
கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சின்ன மேட்டூரில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 - 2024 ஆண்டின்கீழ் ரூ. 17.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுடன் கூடிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். சதாசிவம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா் .
இதனைத் தொடா்ந்து, தண்டா 4 ரோடு பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்கூடம் கட்டுதல், லக்கம்பட்டி ஊராட்சி, நீதிபுரம், பெரியதண்டா பகுதியில் ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைத்தல், காவேரிபுரம் ஊராட்சி, கோவிந்தபாடி பகுதியில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்கூடம் கட்டுதல் ஆகிய பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் கொளத்தூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எம்.சி.மாரப்பன், கொளத்தூா் பேரூராட்சி தலைவா் பாலசுப்பிரமணியன் , லக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் அண்ணாதுரை, கொளத்தூா் பேரூராட்சி செயலாளா் கோவிந்தராஜ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.