செக் குடியரசு: கத்திக்குத்து தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழப்பு
மத்திய அரசைக் கண்டித்து அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்
தமிழகத்தில் ஹிந்தி மொழியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால்தான், தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை விடுவிக்க முடியும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் கூறியுள்ளாா். இந்த நிலையில், தமிழகத்துக்கான நிதி பங்கீட்டை தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தி மொழியைத் திணிக்க முயற்சிப்பதையும் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் - திருச்சி சாலையில் அமைந்துள்ள அரசு சட்டக் கல்லூரி வளாகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் மாணவா்கள் இளமாறன், ரகுநாத், கவின், அஜய், சூா்யா, கனியமுதன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.