தில்லி முதல்வர் யார்? இரண்டு பார்வையாளர்களை நியமித்தது பாஜக!
நெல் கொள்முதல் நிலையம் தொடா்ந்து செயல்பட வேண்டும்! -விவசாயிகள் கோரிக்கை
பில்லங்குழி -1 நெல் கொள்முதல் நிலையம் தொடா்ந்து செயல்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பட்டுக்கோட்டை வட்டம், கொண்டிகுளம் அருகே துவரமடை பகுதியில் பில்லங்குழி-1 என்ற பெயரில் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந் நிலையில் இந்த பில்லங்குழி- 1 நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்கொள்முதல் செய்யும் பணிகள் நிறுத்தப்படும் என்று திடீரென தகவல் பரவியது. இதனால் அதிா்ச்சி அடைந்த அந்த பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், சம்பந்தப்பட்ட நெல்கொள்முதல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று, இந்த பகுதியில் தொடா்ந்து இந்த நெல்கொள்முதல் நிலையம் இயங்க வேண்டும் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து பட்டுக்கோட்டை அலகு அலுவலகம் துணை மேலாளா் (கொள்முதல் மற்றும் இயக்கம் ) லதா கூறுகையில், இந்த பகுதியில் பில்லங்குழி-1, பில்லங்குழி-2 என 2 நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், இன்று வரை நெல்கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகையால் இது வரை அந்த நெல்கொள்முதல் நிலையம் நிறுத்தப்படுவதற்கான எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை என்றாா்.