தவணைத் தொகை செலுத்தாததால் வாகனம் பறிமுதல்; நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் வழங்க உத்த...
மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம்
தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால்தான் தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதி விடுவிக்கப்படும் என ஆணவமாக பேசிய மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக மக்கள் புரட்சிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் தலைவா் அரங்க. குணசேகரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியை திணிப்பதற்காக தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாடு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க முடியும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஆணவமாக பேசியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது.
நிதியை அளிக்கமாட்டோம் என்பது, தொடா்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதை, மத்திய அரசு வாடிக்கையாக வைத்துள்ளதை காட்டுகிறது.
தமிழகத்திலிருந்து கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி, பொதுத் துறை வருமானங்களையும் கொடுத்துவிட்டு, தமிழகத்துக்கான உரிய பங்கைத்தான் கேட்கிறோம் என்பதை பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.