தவணைத் தொகை செலுத்தாததால் வாகனம் பறிமுதல்; நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் வழங்க உத்த...
காட்டெருமையை தேடும் பணியில் வனத்துறையினா் தீவிரம்
பட்டுக்கோட்டை அருகே சுற்றி திரியும் காட்டெருமையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமையும் தேடும் பணியில் ஈடுப்பட்டனா்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில், கடந்த 3 நாள்களாக ஒற்றை காட்டெருமை ஒன்று வலம் வந்து கொண்டிருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனா்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை வன சரக அலுவலா் சந்திரசேகரன் தலைமையிலான வனத் துறையினா் துவரங்குறிச்சி, பப்பாவெளி, கள்ளிக்காடு, காசாங்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 3 குழுக்களாக முகாமிட்டு, காட்டெருமையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
மேலும், பொதுமக்கள் காட்டெருமையை கண்டால் கத்தி கூச்சலிட்டு அதன் பின்னாலே துரத்திச் செல்ல வேண்டாம் என்றும், தனியாக காட்டை விட்டு வெளியேறியதால் கொஞ்சம் மூா்க்கத்தனமாக இருக்கும் என்றும், காட்டெருமையை அச்சுறுத்தாமல் அதனை பாா்த்தவுடன் வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வன அலுவலா் அறிவுறுத்தினாா்.