தொழிலாளி கொலை வழக்கு: பெயிண்டா் கைது
தூத்துக்குடி அருகே தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் பெயிண்டா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி அருகே முத்தையாபுரம் முனியசாமி நகரைச் சோ்ந்த அந்தோணி மகன் ராஜா (45). இவருக்கும், பக்கத்து வீட்டைச் சோ்ந்த பெயிண்டரான சுரேஷ் (40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.
வெள்ளிக்கிழமை இரவு ராஜாவை சுரேஷ் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினாராம். இதில், ராஜா உயிரிழந்தாா். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுரேஷை சனிக்கிழமை கைது செய்தனா்.