ஹிந்தி மொழியே! உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே! - முதல்வர் மு.க. ஸ்டாலின்...
சைபீரியாவில் நிலநடுக்கம்
ரஷியாவின் சைபீரியா பகுதியில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானது.
உள்ளூா் நேரப்படி காலை 8.48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அருகிலுள்ள பிராந்தியங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
ஒரு சில இடங்களில் மட்டும் லேசான கட்டுமான சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.