ஏன் வேண்டாம் மும்மொழி? மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஸ் பதில்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை: "சாராய விற்பனையைத் தட்டிக்கேட்டதுதான் காரணமா?" - காவல்துறை சொல்வதென்ன?
சாராய வியாபாரிகளின் அட்டூழியத்தைத் தட்டிக் கேட்டதாக மாணவர் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் பகுதியில் மாணவர் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பரபரப்பான பேசுபொருளானது. அப்பகுதியில் சாராய வியாபாரிகளின் அட்டூழியத்தைத் தட்டிக் கேட்டதால், சாராய வியாபாரிகளால் இருவரும் படுகொலை செய்யப்பட்டதாகப் புகாரளிக்கப்பட்டது.
கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை இருவரின் உடலையும், வாங்க மாட்டோம் என்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இன்று (பிப் 15) போராட்டம் நடத்தி வருகின்றனர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-01-07/j9c16nxr/d5bcf78a64ec8276ae42544969452352.jpg)
இந்த விவகாரத்தில் மூவேந்தன், ராஜ்குமார், தங்கதுரை ஆகிய மூவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல்துறை. இந்நிலையில், மயிலாடுதுறையில் இருவர் உயிரிழந்த விவகாரத்திற்குச் சாராய விற்பனை காரணம் அல்ல என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் காவல்துறை, "ஒரே தெருவில் வசித்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறே சம்பவத்திற்குக் காரணம். தினேஷ், மூவேந்தன் ஆகியோர் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-15/2m2ze9e7/collage-down-1739588579.jpg)
சம்பவத் தினத்தன்று மூவேந்தன் உள்ளிட்டோர் தினேஷிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். தடுக்க வந்த ஹரிஷ், சக்தி ஆகியோர் மூவேந்தன் உள்ளிட்டோர் கத்தியால் தாக்கியுள்ளனர்" என்று தெரிவித்திருக்கிறது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play