தொழில்நுட்பங்களில் தமிழர்கள்! பண்ருட்டி அகழாய்வில் சங்கினாலான பொருள் கண்டெடுப்பு...
Kerala: கேஷியரின் கழுத்தில் கத்தி வைத்து பெடரல் வங்கியில் கொள்ளை; கேரளாவை அதிர வைத்த தனி ஒருவன்
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி பேட்டை பகுதியில் பெடரல் வங்கி கிளை உள்ளது. அங்கு நேற்று மதியம் 2 மணிக்கு பைக்கில் வந்த ஹெல்மட் அணிந்த நபர் வங்கிக்குள் நுழைந்தார். முகத்தை முழுமையாக மூடியிருந்த அவரது முதுகில் பேக் கிடந்துள்ளது.
கேஷ் கவுண்டரை அடித்து உடைத்து பெண் கேஷியரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார். அங்கிருந்த 2 ஊழியர்களைக் கழிவறைக்குள் வைத்துப் பூட்டினார். பின்னர் 15 லட்சம் ரூபாய் கொள்ளையடுத்துச் சென்றார். அவர் யார் என்று தெரியவில்லை. அந்த சமயம் உணவு இடைவேளை என்பதால் பெரிய அளவு வாடிக்கையாளர்களோ, ஊழியர்களோ இல்லை. வங்கிக்கு செக்யூரிட்டியும் இல்லை எனக் கூறப்படுகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/pq0vnsor/1000041342.jpg)
இதுகுறித்து சாலக்குடி போலீஸார் கூறுகையில், "கொள்ளையடிக்க வந்த நபர் காய்கறி நறுக்கும் கத்தியைக் காட்டி கேஷியரை மிரட்டி உள்ளார். வங்கியில் 15 லட்சம் ரூபாய் வீதம் 3 அடுக்குகளாக 45 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருந்தது. ஏ.டி.எம்-களில் வைப்பதற்குக் கொண்டு செல்வதற்காக அந்த பணம் வைக்கப்பட்டிருந்தது.
கொள்ளையடிக்க வந்தவர் 15 லட்சம் ரூபாயை மட்டும் எடுத்து பையில் வைத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஏன் மொத்த பணத்தையும் எடுக்கவில்லை என்பது குறித்துத் தெரியவில்லை. அவர் கேஷ் கவுண்டர் சாவியை இந்தி மொழியில் பேசி கேட்டுள்ளார். அதனால் மட்டுமே அவர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. சுமார் 3 நிமிடத்துக்குள் அவர் வங்கிக்குள் இருந்து பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார். அவரது நடவடிக்கையைப் பார்த்தால் அந்த வங்கியைப் பற்றி ஏற்கனவே தெரிந்தவர்தான் எனச் சந்தேகிக்கிறோம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-14/6mxppv0j/1000041340.jpg)
கொள்ளையடிக்க வந்தவர் எந்த பக்கம் சென்றார் என்ற தகவல் கிடைத்துள்ளது. கேரளா மட்டும் அல்லாது வெளி மாநிலங்களிலும் ரயில்வே நிலையங்கள் அலர்ட் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு வங்கியிலிருந்தோ, வெளியிலிருந்தோ யாராவது உதவினார்களா என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
அதே சமயம் கொள்ளை நடந்த சம்பவத்தில் வங்கி தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை என பெடரல் வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play