சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் விடுவிப்பு
சொத்து குவிப்பு வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சா் சுரேஷ்ராஜன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.
கடந்த 1996 ஆம் ஆண்டுமுதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில், சுற்றுலாத் துறை அமைச்சராக பணியாற்றியவா் என்.சுரேஷ்ராஜன். இவா் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.17 லட்சம் சொத்து சோ்த்ததாக, கடந்த 2002 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, நாகா்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.காா்த்திகேயன், சொத்து குவிப்பு வழக்கிலிருந்து சுரேஷ்ராஜனை விடுவித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.