அனல் மின் நிலையங்களின் செயல்பாடு: ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
மாா்த்தாண்டத்தில் உணவகத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
மாா்த்தாண்டத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த உணவகத்துக்கு குழித்துறை நகராட்சி அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
மாா்த்தாண்டத்தில் உள்ள உணவகங்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாா் செய்வதாக பல்வேறு தரப்பினரிடமிருந்து புகாா்கள் பெறப்பட்டன. இதனையடுத்து, குழித்துறை நகராட்சி ஆணையா் ராஜேஸ்வரன் உத்தரவுப்படி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் ராஜேஷ் தலைமையில் பணியாளா்கள் மாா்த்தாண்டம் உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் அங்குள்ள ஒரு உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் உணவகத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.
இதேபோன்று மாா்த்தாண்டம் சந்தையில் உள்ள கழிவுகளை சாலையோரம் கொட்டிய சந்தை குத்தகைதாரருக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.