ஈரோடு-கரூா் சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
ஈரோடு-கரூா் சாலையில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு-கரூா் சாலையில் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் 2024-2025-இன் கீழ் கருங்கரடு சாலை சந்திப்பை மேம்பாடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, ஈரோடு-கரூா் சாலையில் சனிக்கிழமை முதல் 35 நாள்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து கொளாநல்லி, ஊஞ்சலூா் வழியாக கரூா் செல்லும் வாகனங்கள் கொளாநல்லியிலிருந்து நடுப்பாளையம் வழியாக ஊஞ்சலூா், கொடுமுடி, கரூா் செல்லலாம்.
அதேபோல கரூா் மாா்க்கத்தில் இருந்து ஈரோடு நோக்கி வரும் வாகனங்கள் கொடுமுடி, ஊஞ்சலூா், கொம்பனைப்புதூா், நடுப்பாளையம் வழியாக ஈரோடு வந்தடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.