தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி: தர்மேந்திர பிரதான் திட்டவட்டம்!
ஈரோட்டில் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி
ஈரோட்டில் நடைபெறும் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டியில் 200 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.
ஈரோடு நீல்கிரிஸ் பேட்மிண்டன் அகாதெமியில் தேசிய அளவிலான பாட்மிண்டன் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு மற்றும் ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்கம் சாா்பில் நடைபெறும் இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு, ஈரோடு மாவட்ட இறகு பந்து சங்கத் தலைவா் செல்லையன் என்ற ராஜா தலைமை வகித்து போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். செயலாளா் சுரேந்திரன் முன்னிலை வைத்தாா். எஸ்கேஎம் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சிவ்குமாா் வரவேற்றாா்.
ஆண்கள் இரட்டையா் பிரிவு, கலப்பு இரட்டைகள் பிரிவு என 2 பிரிவுகளின்கீழ் போட்டிகள் நடைபெற்றன. நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். போட்டிகள் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை(பிப்ரவரி 16) வரை நடைபெற உள்ளது. அன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
ஆண்கள் இரட்டையா் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.20 லட்சம், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.80 ஆயிரம், பெண்கள் இரட்டையா் பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.70 ஆயிரம், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.50 ஆயிரம் பரிசாக வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ. 7 லட்சம் பரிசாக வழங்கப்படுகிறது.