செய்திகள் :

Beauty Tips: ஆரஞ்சும் ஆவாரையும்... சும்மா பளபளன்னு இருப்பீங்க..!

post image

கருத்த கார்மேகக் கூந்தலை விரும்புபவர்கள், தலா 200 கிராம் ஆவாரம்பூ, வெந்தயத்துடன் ஒரு கிலோ பயத்தம் பருப்பைச் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். தலையில் எண்ணெயை நன்றாகச் சூடுபரக்கத் தேய்த்து, இந்த பவுடரை தண்ணீரில் கரைத்துக் குளிக்கலாம். வாரம் இருமுறை தொடர்ந்து கடைப்பிடித்தால், தலைக்குக் குளிர்ச்சியைத் தந்து கூந்தல் நன்றாக வளர ஆரம்பிக்கும். பொடுகு, பேன் தொல்லையும் நீங்கும்.

பொடுகு
பொடுகு

தலைக்கு டை அடிப்பதால் நெற்றியிலும், கன்னத்திலும் சிலருக்கு, கருமை படர்ந்து இருக்கும். இதைப் போக்க, 200 கிராம் ஆவாரம்பூவை அரைத்து, சாறு எடுக்க வேண்டும். இதை அடுப்பில் வைத்துச் சடசடவென ஓசை வந்தவுடன் இறக்கி, இதனுடன் 200 கிராம் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெயைக் கலந்து முகத்தில் தினமும் தேய்த்துக் குளித்தால் சுருக்கம், கருமை, தேமல் மறைந்து முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு, விளாமிச்சி வேர், கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ இதழ்கள் இவற்றைச் சம அளவில் எடுத்து, சிறிதளவு வசம்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த நலங்கு மாவை, தினமும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சருமம், பொன் நிறமாக மாறும். சருமம் சுத்தமடைந்து, தேமல், கரும்புள்ளிகள் மறையும். பளபளப்பைத் தந்து ஆரோக்கியமாக வைத்திருக்கும். தொடர்ந்து ஆவாரம்பூவைப் பயன்படுத்திவந்தால் சுருக்கங்களைக் குறைத்து, பளிச் சருமத்தைப் பெறலாம்.

ஆவாரம்பூ
ஆவாரம்பூ

இந்த மாவை மாஸ்க் போலப் பூசி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் நல்ல பொலிவையும் குறைந்த செலவில் ஃபேஷியல் செய்த பலனையும் உடனடியாகப் பெற முடியும். மேலும், பார்லரில் செய்யப்படும் ஸ்க்ரப்பிங், ஷைனிங் போன்றவையும் இதிலுள்ள துகள்கள் மூலம் இயற்கையாகவே கிடைத்துவிடுவதால், வேறு எந்த அழகு சிகிச்சையுமே முகத்துக்கும், உடலுக்கும் தேவை இல்லை.

ஆரஞ்சு சருமத்தை மென்மையாகவும், பட்டுப் போலவும் வைத்திருக்க உதவுகிறது. இதனால்தான் அழகு சாதனப் பொருள்கள் பலவற்றில் ஆரஞ்சு சேர்க்கப்படுகிறது. தோலில் கறுப்புப் படைகள் இருந்தால், ஆரஞ்சுப் பழச்சாறைத் தொடர்ந்து தடவினால், படைகள் மறையும். சிலருக்கு, உடலில் திட்டு திட்டாகக் கருமை படர்ந்திருக்கும். கமலா ஆரஞ்சுச்சாறுடன், தக்காளிச்சாறு, பசுநெய் சேர்த்து முகத்தில் தடவி வந்தால், கருமை நிறம் மறைந்து முகம் பொலிவடையும்.

அழகுக்கு அழகு!
அழகுக்கு அழகு!

கமலா ஆரஞ்சுப் பழத்தோலை அரைத்து, பயத்தமாவு, சிறிது பன்னீர் சேர்த்து முகத்தில் மாஸ்க் போட்டு 20 நிமிடங்கள் கழித்துக் கழுவிவர, முகச் சுருக்கம், கரும்புள்ளிகள், தேமல் மறைந்து பிரகாசமாக ஜொலிக்கும்.

பழத்தோலை நன்றாகக் காயவைத்து சீயக்காயுடன் சேர்த்து அரைத்துப் பயன்படுத்தலாம். பேன், பொடுகுத் தொல்லை தீரும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Herbal Hair Care: முடி வளர்ச்சிக்கு 4 மூலிகைத் தைலம்!

ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உறுதியான முடியைப் பெறமுடியவில்லை. ஆரம்பத்தில், இத்தகைய தைலங்களைப் பயன்... மேலும் பார்க்க

Beauty: மல்லிகை... மயக்கும் வாசனையும் சில அழகுக்குறிப்புகளும்..!

''மனதை மயக்கும் மல்லிகைப்பூவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இதன் வாசனை, மருந்தாகவும் பலன் தருகிறது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மல்லிகைப் பூ, உடலுக்குப் புத்துணர்ச்சியையும், மனதுக்க... மேலும் பார்க்க

Hair Care: தலைக்கு மேலே 5 பிரச்னைகள்... தீர்வுகள் இருக்கே..!

பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட..? hair careபொடுகு, ஒரு வகையான பூஞ்சையால் ஏற்படுகிறது. சிலருக்கு அது வேகமாகவும், சிலருக்கு மெதுவாகவும் பரவும். சிலருக்கு என்ன செய்தாலும் நீங்காது. காரணம், அவர்கள் ஸ்கா... மேலும் பார்க்க

Beauty: சுருக்கமில்லாத முகத்துக்கு மசாஜ்... எப்படி செய்யணும்; எவற்றால் செய்யணும்?

முகத்தைச் சுத்தமாக வைத்திருந்தாலே முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்கும். ஆனால், வயது கூடும்போது ஏற்படும் சுருக்கத்தைப் போக்க அழகுக் கலை நிபுணர்களும், மருத்துவர்களும் தரும் ஒரே அட்வைஸ்... மசாஜ்தான்! முகத... மேலும் பார்க்க