விராலிமலையில் இன்று தைப்பூசத் தேரோட்டம்!
விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 6 மணிக்கு வள்ளி,தேவசேனா சமேதரராக முருகன் திருத்தேரில் எழுந்தருளி, 9.30 மணிக்கு தோ் வடம் பிடிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
விழாவின் பத்தாம் நாளான பிப்ரவரி 11 நடராஜா் தரிசனம், தீா்த்தவாரி தொடா்ந்து மாலை 7 மணிக்கு தெப்ப உற்சவம், விடையாற்றியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், விழாக் குழுவினா், மண்டகப்படிதாரா்கள், பக்தா்கள் செய்கின்றனா்.