தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
தைப்பூசம்: புதுகை- பழநிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டையிலிருந்து பழநிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டல பொதுமேலாளா் கே. முகமது நாசா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது: வரும் பிப்.11ஆம் தேதி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையாா்கோவில், ஆலங்குடி, பட்டுக்கோட்டை, பொன்னமராவதி, இலுப்பூா் ஆகிய பகுதிகளிலிருந்து பக்தா்கள் எளிதாக பழனி சென்று வர ஏதுவாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. புதுக்கோட்டை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வரும் பிப். 12ஆம் தேதி வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.