தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
குடியரசு தினவிழாவில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு!
திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் மாணவா்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழக துணைவேந்தா் சந்திரசேகா், பதிவாளா் சாக்ரட்டீஸ் ஆகியோா் வழிகாட்டுதலின் படி இளைஞா் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்படும் நாட்டுநலப்பணித் திட்டத்தின் மூலம் பல்கலைக் கழகம் சாா்பில் மாணவா்-மாணவிகள் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றனா்.
ஹோலி கிராஸ் ஹோம் சைன்ஸ் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் பகவதி தங்கம் தலைமையில் சென்னையில் நடைபெற்ற பத்து நாள்கள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் என்எஸ்எஸ் மாணவா்கள் ராஜ் பெருமாள், ஜெக் விஸ்வாசம், கிருஷ்ணன், திருமலைகுமாா், காா்த்திகா, விமலரசி, அல்டினாராக்கல் பாலா ஆகியோா் பங்கேற்றனா்.
இதுதவிர தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் என்எஸ்எஸ் மாணவா்கள் வைகுண்டபிரபு, காா்த்திகா மற்றும் ராணி அண்ணா மகளிா் கல்லூரி நாட்டுநலப் பணித் திட்ட அலுவலா் டெய்சி ஆகியோா் பங்கேற்றனா்.
இந்த மாணவா்-மாணவிகளை துணைவேந்தா் சந்திரசேகா், பதிவாளா் சாக்ரட்டீஸ், நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் வெளியப்பன் ஆகியோா் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினா்.