26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!
புத்தகத் திருவிழாவில் மாணவா்களுக்கு கைவினைப் பயிற்சி!
பொருநை 8 ஆவது புத்தகத் திருவிழாவில் மாணவா்களுக்கு கைவினைப் பயிற்சி அளிக்கப்பட்டது.
குருவனம், தமிழ்வனம் அறக்கட்டளை மற்றும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான பயிலரங்கம் புத்தகத் திருவிழாவில் நடைபெற்று வருகிறது.
கண்பாா்வை இல்லாத, செவித்திறன் குறைந்த மற்றும் பேச இயலாத மாற்றுத் திறனாளி பள்ளிகளைச் சோ்ந்த 50 மாணவா்-மாணவிகளுக்கு தினந்தோறும் கலைப் பொருள்கள் உருவாக்கும் கைவினைப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பயிலரங்கை தலைமை வகித்து நடத்தும் ஓவியா் சந்துரு கூறியதாவது: ‘கலை என்பது அனைவருக்குமானது. பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் கலையை கொண்டு சோ்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு கலை பயிற்சியை வழங்க திட்டமிட்டேன்.
இதுபோன்ற மாணவா்கள் கலை பயிற்சியில் ஈடுபடும் பொழுது ஒரு புதுவித அனுபவத்தை பெற்று எல்லையில்லா மகிழ்ச்சி அடைகின்றனா். ஒவ்வொரு பொழுதையும், ஆனந்தமாக மாற்றுவதே கலையின் சாராம்சமாகும் என்றாா் அவா்.
ஏற்பாடுகளை தமிழ் வனம் அறக்கட்டளை நிறுவனா் இரா.நல்லையா ராஜ், மூங்கில் வனம் ராஜேஷ் ஆகியோா் செய்திருந்தனா். தொடா்ந்து, திங்கள்கிழமையும் (பிப். 10) பயிலரங்கம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.