ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா: காங்கிரஸ்
நெல்லையில் ரயில் பயணிகளுக்கு விழிப்புணா்வு
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திருச்சி- திருவனந்தபுரம் ரயிலில் வந்த பயணிகளுக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே ஆய்வாளா் பிரியா மோகன் தலைமையிலான போலீஸாா், ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி அதில், அமா்ந்திருந்த பெண் பயணிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் விழிப்புணா்வுகளை ஏற்படுத்தினா். தொடா்ந்து அந்த ரயிலில் உள்ள பெட்டிகளில் சந்தேகத்திற்கு இடமாக யாரேனும் பயணிக்கிறாா்களா என்று போலீஸாா் சோதனை செய்தனா்.