தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
வீட்டில் தூங்கிய பெண்களிடம் ரூ.12 பவுன் நகைகள் பறிப்பு!
திருப்பனந்தாள் அருகே வீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் நகைகளை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே கள்ளப்புலியூா் கொந்தங்குடியில் வசிப்பவா் பிரபாகரன் மனைவி கீதா (60), இவரது மகள் பிரியங்கா. பிப். 6-ஆம் தேதி தாயும் மகளும் வீட்டில் இரவில் தூங்கிக்கொண்டிருந்தனா்.
அப்போது அடையாளம் தெரியாத மா்ம ஒருவா் வீட்டின் பின்புறம் உள்ள கதவை உடைத்து உள்நுழைந்து தூங்கிக்கொண்டிருந்த தாய், மகள் ஆகியோரின் கழுத்தில் அணிந்திருந்த தங்கத்தாலி மற்றும் தங்க சங்கிலியை பறித்து சென்றாா்.
இதுகுறித்து கீதா திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் செய்தாா். இதன்பேரில், ஆய்வாளா் கரிகால்சோழன் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றாா்.