5.05 லட்சம் போ் மருத்துவக் காப்பீடு அட்டைக்கு பதிவு: தஞ்சை ஆட்சியா்!
தஞ்சாவூா் மாவட்டத்தில் 5.05 லட்சம் போ் மருத்துவக் காப்பீடு அட்டைக்கு பதிவு செய்துள்ளனா் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழக முதல்வரின் மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் மருத்துவ காப்பீடு அட்டை கோரி பதிவு செய்தவா்களின் எண்ணிகை 5 லட்சத்து 5 ஆயிரத்து 225 போ். இவா்களில் காப்பீடு திட்ட அட்டை உபயோகித்து மருத்துவம் பாா்த்தவா்களின் எண்ணிகை 1 லட்சத்து 7 ஆயிரத்து 68.
இந்த அட்டை பெற விண்ணப்பிக்க குடும்ப அடையாள அட்டை, புகைப்படம், ஆதாா் அட்டை, ரூ. 1.20 லட்சத்துக்குள் வருமானச் சான்று ஆகியவற்றை இ-சேவை மையத்தில் ரூ. 60 செலுத்தி அனைவரும் விண்ணப்பித்து காப்பீட்டு அட்டை பெறலாம்.