Ranveer Allahbadia: `உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதை..'- யூடியூபர் சர்ச்சை பேச்ச...
பேராவூரணி இளைஞருடன் வங்கதேசப் பெண்ணுக்கு திருமணம்
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியை சோ்ந்த இளைஞரை வங்கதேசத்தை சோ்ந்த பெண் காதலித்து தமிழ்முறைப்படி திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்டாா்.
பேராவூரணி அருகே உள்ள கள்ளங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி-இளமதி தம்பதி, இவரது மகன் குலோத்துங்கச் சோழன்(36). மலேசியாவில் பணியாற்றி வருகிறாா்.
இவரும் வங்கதேசத்தைச் சோ்ந்த ராதா மதாப் சா்மா - அனிதா சா்மா தம்பதியரின் மகளும் மலேசியா ஹானா்ஸ் செகி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அனிலா சா்மாவும் (27) கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனா்.
இவருடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தையடுத்து, பேராவூரணியில் இருவருக்கும் தமிழ் முறைப்படி திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரும் திரளாக கலந்து கொண்டனா்.