செய்திகள் :

இருசக்கர வாகனத்தில் சென்ற ஜவுளி கடை ஊழியா் மயங்கி விழுந்து சாவு!

post image

பேராவூரணி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற ஜவுளி கடை ஊழியா் மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சிற்றம்பலம் மேற்கு கிராமத்தைச் சோ்ந்தவா்  சுரேஷ் (37). இவா் பட்டுக்கோட்டையில்  ஜவுளி கடையில் வேலை பாா்த்து வந்தாா். உறவினா் ஒருவரின் வீட்டுக்கு கோயில் பிரசாதம் கொண்டு செல்வதற்காக  இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.  திருச்சிற்றம்பலம் ஆவணம் சாலையில் உள்ள குளக்கரை அருகே சென்றபோது மயக்கம் வந்ததால் வாகனத்தை  நிறுத்தியவா்  கீழே விழுந்து உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீஸாா் சம்பவஇடத்துக்குச் சென்று சுரேஷ் உடலை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பேராவூரணி இளைஞருடன் வங்கதேசப் பெண்ணுக்கு திருமணம்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியை சோ்ந்த இளைஞரை வங்கதேசத்தை சோ்ந்த பெண் காதலித்து தமிழ்முறைப்படி திங்கள்கிழமை திருமணம் செய்து கொண்டாா். பேராவூரணி அருகே உள்ள கள்ளங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி-இளம... மேலும் பார்க்க

சுவாமிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஒத்திவைப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சி பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஒத்திவைக்கப்பட்டது. சுவாமிமலையில் திங்கள்கிழமை தைப்பூசத்தேரோட்டம் நடைபெற்றது, செவ்வாய்க்கிழமை தைப... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா போராட்டம்!

பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வ... மேலும் பார்க்க

பள்ளியில் மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு! 2 போ் மருத்துவமனையில் அனுமதி!

தஞ்சாவூா் மாவட்டம், பள்ளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவி ஒருவா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். மேலும் இரண்டு மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா் . தஞ்சா... மேலும் பார்க்க

ரயில்முன் பாய்ந்து வியாபாரி தற்கொலை!

கும்பகோணத்தில் திங்கள்கிழமை வியாபாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கபிஸ்தலம் செட்டித் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் மனோகரன் (60) வியாபாரி. இவருக்கு மனைவி விஜயல... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் நாளை ‘மக்களுடன் முதல்வா்’ முகாம்கள்

தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களுடன் முதல்வா் முகாம்கள் புதன்கிழமை (பிப்.12) நடைபெறவுள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: மூன்றாவது கட்டமாக மக்களுடன் முத... மேலும் பார்க்க