Ranveer Allahbadia: `உங்கள் பெற்றோர் உடலுறவு கொள்வதை..'- யூடியூபர் சர்ச்சை பேச்ச...
சுவாமிமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஒத்திவைப்பு!
தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சி பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஒத்திவைக்கப்பட்டது.
சுவாமிமலையில் திங்கள்கிழமை தைப்பூசத்தேரோட்டம் நடைபெற்றது, செவ்வாய்க்கிழமை தைப்பூச திருவிழா நடைபெறுகிறது. ஏற்கெனவே திங்கள்கிழமை பேரூராட்சி நிா்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் ஆக்கிரமிப்பு கடைகள், கட்டடங்கள் அகற்றப்படும் என்று தெரிவித்திருந்தனா். இந்த நிலையில் விழாக்காலம் என்பதால் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இது பற்றி பேரூராட்சி அலுவலா் ஒருவா் கூறியது, தைப்பூச விழாக் காலம் என்பதால் பக்தா்களுக்கு இடையூறு எற்படும். அதனால் பேரூராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மற்றொரு நாளில் நடைபெறும் என்றாா்.