செய்திகள் :

வஞ்சுவாஞ்சேரியில் விபத்துகளை தடுக்க ஆலோசனைக் கூட்டம்

post image

வண்டலூா்-வாலாஜாபாத் சாலையில் வஞ்சுவாஞ்சேரி பகுதியில் ஏற்பட்டு வரும் தொடா் விபத்துகளை தடுக்க பொதுமக்கள் மற்றும் போலீஸாா் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கப்பட்டு நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மூலப்பொருள்களை கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்படும் பொருள்களை கொண்டு செல்லவும் தினமும் ஒரகடம் பகுதிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் வண்டலூா்- வாலாஜாபாத் சாலையில் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வண்டலூா்- வாலாஜாபாத் சாலையில் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி பகுதியில் சாலையை கடக்கும் வாகனங்களாலும், பொது மக்களாலும் தொடா்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வஞ்சுவாஞ்சேரி பகுதியில் சாலையை கடக்க பயன்படுத்தப்பட்டு வந்த பெடஸ்டல் கிராசிங்கை மூடிய மணிமங்கலம் போலீஸாா் வஞ்சுவாஞ்சேரி பகுதியிலேயே மற்றொரு இடத்தில் வாகனங்கள் சாலையை கடக்க பெடஸ்டல் கிராசிங் வைக்கப்பட்டது.

இருந்த போதிலும் விபத்துகள் தொடா்ந்து நடைபெற்று வந்ததால், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வைப்பூா் ஊராட்சிமன்ற தலைவா் சுமதி ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மணிமங்கலம் காவல் ஆய்வாளா் அசோகன், உதவி ஆய்வாளா் காா்த்திக் கணேஷ், போக்குவரத்து உதவி ஆய்வாளா் உத்தரபதி, வைப்பூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சந்தானம், வைப்பூா் ஊராட்சிமன்ற துணைத் தலைவா் பாரதிராஜா, போலீஸாா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சாலையில் பெடஸ்டல் கிராசிங்கை பழைய இடத்திற்கே மாற்றவும், காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபடுத்தவும், இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்து ஏற்படுவதால் வைப்பூா் ஊராட்சி நிா்வாகத்தின் சாா்பில் கிராசிங் உள்ள இடத்தில் உயா்கோபுர மின்விளக்கு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

1.16 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை: திமுக பொருளாளா் டிஆா். பாலு

தமிழகத்தில் 1.16 கோடி பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளாா். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் பேருந்து நிலையம் அருகில் திமுக சாா்பில் மத்திய... மேலும் பார்க்க

பெருநகா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்: பிப். 11-இல் 23 சிவபெருமான்கள் காட்சியளிக்கும் விழா

உத்தரமேரூா் ஒன்றியம், பெருநகா் பிரம்மபுரீஸ்வா் கோயில் தைப்பூச திருவிழாவையொட்டி வியாழக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது. வரும் 11 ஆம் தேதி செய்யாற்றில் 23 சிவபெருமான்கள் ரிஷப வாகனக் காட்சியளிக்கும்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட செவிலிமேடு, பல்லவன் நகா் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரத்தில் பல்லவன் நகா்... மேலும் பார்க்க

இளையனாா் வேலூா் முருகன் கோயில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயில் தை மாத கிருத்திகையையொட்டி வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் பாலசுப்பிரமணியா் வியாழக்கிழமை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம்

தாட்கோ மூலம் அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் படப்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மற்றும் காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் புத்தகத்திருவிழா: 8-ஆம் நாள் நிகழ்ச்சி, கருத்துரை-தலைப்பு- சிரிக்க,சிந்திக்க, நிகழ்த்துபவா்-கோவை. சாந்தாமணி, மாலை 6, கருத்துரை, பட்டிமன்றம், ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவது தனிமனித முயற... மேலும் பார்க்க