தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
சாலைத் தடுப்பில் பேருந்து மோதல்: 20 பயணிகள் காயம்!
செய்யாறு அருகே தூசி கிராமத்தில் சாலைத் தடுப்பில் தனியாா் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் காயமடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பேருந்து நிலையத்தில் இருந்து சனிக்கிழமை மாலை 6 மணியளவில் தனியாா் பேருந்து ஒன்று காஞ்சிபுரம் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
இரவு 7 மணியளவில் வந்தவாசி சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஐயங்காா் குளம் கூட்டுச் சாலை நடுவில் இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
பயணிகளின் அலறல் சப்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்தவா்கள் சென்று காயமடைந்தவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து தூசி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.