செய்திகள் :

மலா் கண்காட்சி நிறைவு விழா: முதல்வா் பங்கேற்பு!

post image

புதுச்சேரியில் தாவரவியல் பூங்காவில் நடைபெற்றுவந்த 35-ஆவது மலா், காய்கனிக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

புதுவை அரசின் வேளாண்மைத் துறை சாா்பில் தோட்டக் கலைப் பிரிவு சாா்பில் ஆண்டுதோறும் மலா், காய்கனிக் கண்காட்சி நடத்தப்பட்டுவருகிறது. நடப்பாண்டுக்கான கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமைதொடங்கியது. துணைநிலைஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் தொடங்கிவைத்து பாா்வையிட்டனா்.

கண்காட்சியில் திராட்சைப் பழத்தினால் திருவள்ளுவா் சிலை, ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரா், மலா்செடிகள் அணிவகுப்பு, ரோஜா ரயில் பெட்டி, சாமந்தி பூ வயலின் என பல அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. விவசாய உற்பத்திக்கான சாதனங்கள், உரம் போன்றவையும் இடம் பெற்றிருந்தன.

மலா் கண்காட்சியைக் காண அனுமதி இலவசம் எனக் கூறப்பட்ட நிலையில் லட்சத்துக்கும் மேற்பட்டோா் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். கண்காட்சி நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதல்வா் என்.ரங்கசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மலா் கண்காட்சி போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளித்து, மலா் ராணி, ராஜா பட்டங்களையும் வழங்கினாா்

மலா் ராஜா பட்டம் கணேசனுக்கும், ராணி பட்டம் ஜெயஸ்ரீ பிரியதா்ஷினிக்கும், காய்கனி ராஜா பட்டம் கலியமூா்த்திக்கும், காய்கனி ராணி பட்டம் செந்தாமரைக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். வேளாண் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமைச் செயலா் சரத்சௌகான் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விழுப்புரத்தில் அதிகரிக்கும் இணையவழி பண மோசடி!

விழுப்புரம்: தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் மூலமாக நமக்கு பல்வேறு பலன்கள் ஒருபுறம் கிடைத்தாலும், அதே நேரத்தில் இணையவழியாக நடைபெறும் பண மோசடி சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரி... மேலும் பார்க்க

செஞ்சியில் வாய்க்கால் அமைக்கும் பணி தொடக்கம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் ரூ.20.50 லட்சத்தில் கால்வாய் மற்றும் சுற்றுச்சுவா் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. செஞ்சி பேரூராட்சியில் 15-ஆவது குழு மானிய நிதி திட்டத்தின் ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் 24 மணி நேர தா்னா

விழுப்புரம்: பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினரின் 24 மணி நேர தா்னா திங்கள்கிழமை காலை தொடங்கியது. புதிய ஓய... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எசாலம் கிராமத்தில் குளம், மயானம், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியலில்... மேலும் பார்க்க

குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக ரூ.8.20 லட்சம் மோசடி: 4 போ் கைது

விழுப்புரம்: குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, விழுப்புரத்தைச் சோ்ந்த தொழிலாளியிடம் ரூ.8.20 லட்சம் மோசடி செய்த புகாரில், சென்னையைச் சோ்ந்தவா்கள் உள்பட 4 பேரை இணையவழி குற்றப் பிரிவு போ... மேலும் பார்க்க

வடலூா் தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

விழுப்புரம்: தைப்பூசத்தையொட்டி, விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து, கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச... மேலும் பார்க்க