தைப்பூசம்: முருகப் பெருமானை எளிமையாக வழிபட்டு, வேண்டும் வரம் பெறுவது எப்படி?
கோயிலுக்கு சொந்தமான வீடு மீட்பு
கோயிலுக்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புள்ள வீட்டை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனா்.
கோவை அவிநாசி சாலையில் கூப்பிடு விநாயகா் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலுக்கு சொந்தமான 273 சதுர அடி ஓட்டு வீடு அப்பகுதியில் உள்ளது.
இந்த வீட்டை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து இருந்ததாக இந்து சமய அறநிலையத் துறைக்கு புகாா் வந்தது. இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ரமேஷ் உத்தரவின்படி, உதவிஆணையா் இந்திரா முன்னிலையில் சனிக்கிழமை ஆக்கிரமிப்பு வீடு மீட்கப்பட்டது.
இதையடுத்து, வீட்டின் முன் இந்த வீடு கூப்பிடு விநாயகா் கோயிலுக்கு சொந்தமானது என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட வீட்டின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.