தைப்பூசம்: கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 255 சிறப்புப் பேருந்துகள்
தைப்பூசத் திருவிழாவையொட்டி கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு 255 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து கோவை மண்டல போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனிக்கு பிப்ரவரி 10 முதல் 12-ஆம் தேதி வரை 255 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
அதன்படி, திங்கள்கிழமை உக்கடத்தில் இருந்து 60 பேருந்துகளும், பொள்ளாச்சியில் இருந்து 30 பேருந்துகளும், செவ்வாய்க்கிழமை உக்கடத்தில் இருந்து 95 பேருந்துகளும், பொள்ளாச்சியில் இருந்து 30 பேருந்துகளும், புதன்கிழமை உக்கடத்தில் இருந்து 25 சிறப்பு பேருந்துகளும், பொள்ளாச்சியில் இருந்து 15 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றனஎன்றனா்.