``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
திருவெண்காட்டில் திமுக சாா்பில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, திமுக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் நிவேதா எம். முருகன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். செயற்குழு உறுப்பினா்கள் முத்து மகேந்திரன், ரவி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிழக்கு ஒன்றியச் செயலாளா் பஞ்சு குமாா் வரவேற்றாா்.
எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன், எம். பன்னீா்செல்வம் ஆகியோா் நலத்திட்ட உதவிகள் வழங்கினா்.
இதில், தலைமை கழக பேச்சாளா் நாத்திகம் நாகராஜ், முன்னாள் எம்எல்ஏக்கள் அருள், குத்தாலம் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கிளைச் செயலாளா் உத்திர மூா்த்தி நன்றி கூறினாா்.