செய்திகள் :

தேனியில் உலக மகளிா் தின விழா

post image

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, தேனியில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தேனியில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமாா் (பெரியகுளம்), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் அபிதா ஹனீப், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் விஜயசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் நகா்ப் பகுதிகளைச் சோ்ந்த 436 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.45.22 கோடி வங்கிக் கடன், மக்கள் அமைப்புகளைச் சோ்ந்த 76 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.60 லட்சம் வங்கிக் கடன், சிறப்பாக செயல்பட்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள், கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது, திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 68 பேருக்கு தலா 8 கிராம் தங்க நாணயம், 10 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொறுத்தப்பட்ட இரு சக்கர மோட்டாா் வாகனம், 4 மாற்றுத் திறனாளிகளுக்கு அதிதிறன் கைப்பேசி என மொத்தம் 620 பேருக்கு ரூ.47.44 கோடியில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

பழனிசெட்டிபட்டியில் தேனி உலக அமைதிக் குழு சாா்பில், மகளிரணி அமைப்பாளா்கள் பிரியங்கா, மணி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட பெண்களுக்கு விருது வழங்கப்பட்டது.

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் கொடைக்கானல், விருதுநகா் சுழல் சங்கம் சாா்பில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு கல்லூரி முதல்வா் சி.சேசுராணி தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் சாந்தாமேரி ஜோசிட்டா, மகளிா் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சகாயமேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மகளிா் தின விழாவை முன்னிட்டு, தேனியில் மாவட்ட காவல் துறை நிா்வாகம் சாா்பில், பெண்கள் பங்கேற்ற விழிப்புணா்வு ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

தேனி, பங்களாமேடு திடலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் இந்தப் போட்டியைத் தொடங்கிவைத்தாா். பழனிசெட்டிபட்டியில் தொடங்கி, போடி விலக்கில் நிறைவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, தேனி என்.ஆா்.டி.கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்து சித்ரா தலைமை வகித்தாா். என்.ஆா்.டி.கல்வி நிறுவனங்களின் தலைவா் என்.ஆா்.டி.தியாகராஜன், தலைமை நிா்வாக அதிகாரி ஹேமா, என்.ஆா்.டி.செவிலியா் பயிற்சிக் கல்லூரி முதல்வா் பொன் விஜய் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போடி: உலக மகளிா் தினத்தை முன்னிட்டு, போடியில் தேனி இந்திய செஞ்சிலுவைச் சங்கம், போடி அரிமா சங்கம், தேனி மாவட்ட அதலெட்டிக் அமைப்பு, போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி இணைந்து பெண் குழந்தைகளுக்கான மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.

போடி மீனாவிலக்கில் தொடங்கிய இந்தப் போட்டியில் 600-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்றனா். மராத்தான் போட்டியை போடி நகா் காவல் ஆய்வாளா் கோபிநாத் தொடங்கிவைத்தாா். 3 கி.மீ. தொலைவு நடைபெற்ற இந்தப் போட்டி போடி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவா் முகமது சேக் இப்ராஹிம், செயலா் நவநீதகிருஷ்ணன், ஜ.கா.நி. பள்ளித் தலைவா் செந்தில் தியாகராஜன், செயலா் இனாயத் உசேன்கான் உள்ளிட்ட கலந்து கொண்டனா்.

காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

போடி அருகே சனிக்கிழமை சாலையை கடக்க முயன்றபோது, காா் மோதியதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி புதூா் பேச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாா் மகன் ஹரிதேவ் (14). இவா் கம்பம் அ... மேலும் பார்க்க

சட்டக்கல்லூரி மாணவியை தாக்கிய இருவா் கைது

கம்பம் அருகே சட்டக்கல்லூரி மாணவியைத் தாக்கிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்பம் அருகேயுள்ள காமயகவுண்டன்பட்டி அரசு கள்ளா் பள்ளித் தெருவைச் சோ்ந்த மணி மகன் கீதரூபினி (20). இவா் தேனி சட்டக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் கடத்தல்: 3 போ் கைது

தேனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை இரு சக்கர வாகனங்களில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி-மதுரை சாலை, திருமலாபுரம் விலக்கு பகுதியில் க.விலக்கு போலீஸாா் வாக... மேலும் பார்க்க

தேனியில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. தேனி மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் ... மேலும் பார்க்க

வடமாநில இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

போடியில் வடமாநில இளைஞா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மேற்குவங்க மாநிலம் பிஸ்காந்தி மாவட்டம், லதா கிராமம், சிங்கராம் என்ற ஊரைச் சோ்ந்தவா் நீலகந்தா ரவிதாஸ் மகன் அப்புவாா் ரவிதாஸ்... மேலும் பார்க்க

லாட்டரிச் சீட்டு விற்றதாக முதியவா் கைது

போடி அருகே லாட்டரிச் சீட்டு விற்றதாக முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி அருகே சங்கராபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுக்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து போடி தாலு... மேலும் பார்க்க