பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி அலுவலகங்களை உடனடியாக ஒதுக்க தில்லி பேரவைத் தலைவா...
கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
கேரளம் மாநிலம், உடுப்பி கொச்சின் கப்பல் கட்டும் தளம் நிறுவனத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். UCSL/IMS/HR/VN/F/11-ReN/2/OA/2025/33
பணி: Office Assistant
காலியிடங்கள்: 8
தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் மேலும் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ. 25,000, இரண்டாம் ஆண்டு ரூ. 25.510, மூன்றாம் ஆண்டு ரூ. 26,040, நான்காம் ஆண்டு ரூ. 26.590, ஐந்தாம் ஆண்டு ரூ. 27,.150
வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும். அதாவது 18.3. 1995-க்கு பின்னர் பிறந்த வராக இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரப்பர் வாரியத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.in அல்லது www.udupicsl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.3.2025
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைபார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.