Jagdeep Dhankhar: துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நெஞ்சுவலியால் எய்ம்ஸ் மருத்துவம...
மிஸ்பண்ணிடாதீங்க... ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வங்கி பணியில் சேருவதே குறிக்கோளாக வைத்து படித்து வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பாக, மத்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) சொந்தமான ஐடிபிஐ வங்கியில் நிரப்பப்பட உள்ள 650 இளநிலை உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 12/2024- 26
பணி: Junior Assistant Manager
காலியிடங்கள்: 650
தகுதி: குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளங்கலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் உரையாடும் திறன் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: 1.3.2025 தேதியின்படி 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பித்துவிட்டீர்களா..?டிஎச்டிசி நிறுவனத்தில் பொறியாளர், எக்ஸிகியூட்டிவ் வேலை: காலியிடங்கள் 129
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஐடிபிஐ வங்கி சார்பாக PG Diploma in Banking and Finance (PGDOF) என்ற ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் போது வங்கி விதிமுறைப்படி உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு Junior Assistant Manager என்ற நிரந்தர பணி வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம், தேதி குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும். விண்ணப்பத்தாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
தேர்வு மையம்: தமிழ்நாட்டில் கோவை, சென்னை, மதுரை, ஈரோடு, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் விருதுநகர் ஆகிய இடங்களில் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் தேதி: 6.4.2025
விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்தற்கான கடைசி நாள்: 12.3.2025