ஹாட்டஸ்ட் சர்ப்ரைஸ்..! கேதிகா சர்மாவின் பாடல் விடியோ எப்போது?
ராபின்ஹூட் படத்தில் இருந்து கேதிகா சர்மாவின் பாடல் விடியோ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் நிதின் நாயகனாகவும் ஸ்ரீ லீலா நாயகியாகவும் நடித்துள்ள ராபின்ஹூட் படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ‘அதிதா சர்பிரைஸ்’ எனும் பாடலுக்கு கேதிகா சர்மா கவர்ச்சியாக நடனமாடியுள்ளார்.
இந்தப் பாடல் நாளை (மார்ச்.10) வெளியாகவிருக்கிறது. இதனை படக்குழு ,”ஹாட்டஸ்ட் சர்ப்ரைஸ் ஆஃப் தி இயர்” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சேகர் மாஸ்டர் இந்தப் பாடலுக்கு நடனமைத்துள்ளார்.
தெலுங்கில் வெளியான குத்துப் பாடல்கள் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளன.
இந்நிலையில் டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமாகி தற்போது நடிகையாக மாறியுள்ள கேதிகா சர்மாவின் நடனத்துக்கு ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
இந்தப் படம் வரும் மார்ச். 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
