செய்திகள் :

திருச்செந்தூர்: வெட்டி வேர்ச் சப்பரத்தில் காட்சியளித்த சண்முகர்!

post image

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா ஏழாம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமி சண்முகர் வெட்டி வேர்ச் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனத்தில் காட்சி அளித்தார்.

இக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த மார்ச் 3ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் நாள்தோறும் சுவாமி, அம்மன் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகின்றனர்.

முக்கிய திருநாளான ஞாயிற்றுக்கிழமை ஏழாம் நாளை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. காலை 5 மணியளவில் அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிக்க: பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்வபவர்களுக்கு மரண தண்டனை: மபி முதல்வர்

பக்தர்கள் கூட்டம்.

அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தை சேர்ந்தார்.

நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜோகோவிச், ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வி

இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஏடிபி, டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் 24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச், முன்னணி வீரா் ருப்லேவ் அதிா்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினா். அமெரிக்காவின் இண்டியன்வெல்... மேலும் பார்க்க

வெற்றியுடன் கடைசி ஆட்டத்தை நிறைவு செய்தது சென்னை!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் தனது கடைசி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் நிறைவு செய்தது சென்னையின் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை ஜவாஹா்லால... மேலும் பார்க்க

இணையத்தொடரில் நடிக்க நிபந்தனை விதித்த கீர்த்தி சனோன்!

நடிகை கீர்த்தி சனோன் முதல்முறையாக இணையத்தொடரில் அறிமுகமாகவிருக்கிறார்.தெலுங்கில் அறிமுகமான நடிகை கீர்த்தி சனோன் தற்போது ஹிந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸுடன் நடித்தார். ப... மேலும் பார்க்க

46 வயதில் தாயாகவுள்ளதை அறிவித்த சின்ன திரை நடிகை!

சின்ன திரை நடிகையும் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியுமான சங்கீதா தான் கருவுற்றுள்ளதை அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் பகிர்ந்துள்ளார். சின்ன திரை நடிகையான சங... மேலும் பார்க்க

அடுத்த படம் அஜித்துடனா? புஷ்கர்-காயத்ரி கூறியதென்ன?

இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி நடிகர் அஜித்தை இயக்குவது குறித்து பேசியுள்ளார்கள்.ஓரம்போ, வா குவாட்டர் கட்டிங், விக்ரம் வேதா ஆகிய படங்களை இயக்கியவர்கள் கணவன், மனைவியுமான புஷ்கர்-காயத்ரி. சுழல், சுழல் 2 இ... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு எப்போது?

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் தெரியவந்துள்ளது.ஜெயிலர் படத்திற்குப் பிறகு ரஜினி வேட்டையன் படத்தில் நடித்தார். பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணைந்தார்.இதனைத் ... மேலும் பார்க்க