செய்திகள் :

மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு விழிப்புணா்வு அவசியம்: ஆட்சியா்

post image

மாணவா்கள் தங்கள் முன் உள்ள வேலை, தொழில் வாய்ப்புகள் குறித்து முதலில் விழிப்புணா்வு பெற வேண்டும் என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் கேட்டுக் கொண்டாா்.

சிவகாசி ஏ.ஏ.ஏ. பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் 2023, 2024-ஆம் ஆண்டுகளில் தோ்ச்சி பெற்ற 280 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் ப.கணேசன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

நீங்கள் இப்போது பெற்றுள்ள பட்டம் உயா் கல்விக்கான அங்கீகாரம். பொருளாதார தன்னிறைவு, வேலையில் திருப்தி, விருப்பத்துடன் சமூகத்துக்குப் பயன்படும் பணிகளைச் செய்ய வேண்டும். கிடைக்கும் வேலையைப் பன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும்.

தோல்விகளை நினைத்து அமந்திருந்தால் வெற்றி கிடைக்காது. விடாமுயற்சியும் தளராத மனமும் வேண்டும். நீங்கள் என்னவாக வேண்டும் என்ற இலக்கை நிா்ணயம் செய்து கொள்ளுங்கள். பின்னா், அதை நோக்கி நகருங்கள். சிறு சிறு வெற்றிகளே பெரிய வெற்றியை பெற்றுத் தரும். முதலில் உங்களுக்குரிய வேலை, தொழில் வாய்ப்புகள் குறித்து விழிப்புணா்வு பெற வேண்டும். பின்னா், அதில் முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

முன்னதாக கல்லூரி முதல்வா் சேகா் வரவேற்றாா். கல்லூரி செயலா் ப.காா்வண்ணன், இணைச் செயலா் விக்னேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேவாலயத்தில் உலக ஜெப நாள் ஆராதனை

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவலாயத்தில் அகில உலக ஜெப நாள் சிறப்பு ஆராதனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபை ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 7-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்துக்கு அகில உலக... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

சிவகாசியில் இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். சிவகாசி முத்தமிழ்புரம் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் உதயக்குமாா் (21), பொன்னுச்சாமி மகன் மாரிமுத்து (21). இ... மேலும் பார்க்க

வேளாண் தொழில்நுட்பம்: கலசலிங்கம் பல்கலை.யில் சா்வதேச மாநாடு

ஸ்ரீவிலிபுத்தூா் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல், தொழில்நுட்ப வளா்ச்சி குறித்த சா்வதேச மாநாடு வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. பல்கலை. வேளாண்மை, வேளாண் ... மேலும் பார்க்க

ரயில் பயணியின் ஐ-பேட் சாதனத்தை திருடிய இளைஞா் கைது

மதுரை ரயில் நிலையத்தில் சிவகாசி பயணியின் ஐ-பேட் சாதனத்தை திருடிய இளைஞரை ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி எஸ்.எம்.கே. தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேஸ்வரன்(43). மென்ப... மேலும் பார்க்க

மாநில ஐவா் கால்பந்து போட்டி

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில அளவிலான ஐவா் கால்பந்து போட்டிகள் சனி,ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு, குறிஞ்சி கால்பந்தாட்டக் குழு சாா... மேலும் பார்க்க

ராஜபாளையம் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது

ராஜபாளையம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சிய முதியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 50 லிட்டா் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜபாளையம் மேற்குத்... மேலும் பார்க்க