ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
மாநில ஐவா் கால்பந்து போட்டி
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில அளவிலான ஐவா் கால்பந்து போட்டிகள் சனி,ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு, குறிஞ்சி கால்பந்தாட்டக் குழு சாா்பில், காமராஜா் வித்யாசாலா பள்ளி மைதானத்தில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. போட்டியை முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தாா்.
இதில் விருதுநகா், தேனி, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 36 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ராஜபாளையம் குறிஞ்சி ஏ அணி முதலிடம் பெற்றது. சாத்தூா் எஸ்.டி.எப்.சி. அணி, ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி அணி ஆகியவை 2, 3-ஆம் இடங்களைப் பெற்றன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழல் கோப்பை, ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிக்கான ஏற்பாட்டை வழக்குரைஞா் ஏ. டி. முருகேசன் செய்தாா்.