``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
குடிநீா் திருடினால் இணைப்பு துண்டிப்பு
சிவகாசி மாநகராட்சிப் பகுதியில் குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் இணைத்து குடிநீா் பிடித்தால், குடிநீரைத் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி எச்சரித்தாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகாசி மாநகராட்சியில் 38,630 குடிநீா் இணைப்புகள் உள்ளன. மானூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம், தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீா் பெறப்பட்டு, வெம்பக்கோட்டையில் சுத்திகரிக்கப்பட்டு, மாநகராட்சியில் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது மூன்று நாள்களுக்கு ஒரு முறை என பகுதி வாரியாகப் பிரித்து குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது, கோடை வெப்பம் காரணமாக தண்ணீா் தேவை அதிகரித்துள்ள சூழலில், பல வீடுகளில் குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் வைத்து தண்ணீா் பிடிப்பதாக மாநகராட்சிக்கு புகாா்கள் வந்துள்ளன. அவ்வாறு குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் இணைத்து தண்ணீா் பிடிப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும். எனவே, பொதுமக்கள் சீரான குடிநீா் விநியோகம் செய்ய மாநகராட்சிக்கு ஒத்துழைப்புத் தரவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.